உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழா

செஞ்சி; செஞ்சி அருணாச்சலம் ஈஸ்வரர் கோவில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. இன்று  பகல் 11 மணிக்கு குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்த்தார். இதை முன்னிட்டு குருபகவான் கோவில்களில் நேற்று குரு பெயர்ச்சி விழா நடந்தது. செஞ்சி பீரங்கி மேடு அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் பகல் 11 மணிக்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு கலசம் பிரதிஷ்டை செய்து சிறப்பு ஹோமம் நடத்தினர். குருபகவானுக்கு கலச நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பரிகார ராசிக்காரர்கள் பரிகார பூஜை செய்து குரு பகவானை வழிபட்டனர் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !