திருவண்ணாமலை ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :39 minutes ago
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் அடுத்த ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ளது சனீஸ்வர பகவான் கோவில். இங்கு யந்திர வடிவில் மூலவர் சனீஸ்வரன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் பல்வேறு யாக பூஜைகள் நபைபெற்றது. தொடர்ந்து நடந்த கும்பாபிஷேகத்தில் கோபுர கலசத்திற்கு குருக்கள் புனித நீர் ஊற்ற இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து நடந்து சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.