திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் 5 தேர்திருவிழா கோலாகலம்
காரைக்கால்; திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரமோற்சவ விழாவை முன்னிட்டு இன்று 5 தேர் திருவிழாவில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுந்தனர்.
காரைக்கால் ஒருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாவித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரமோற்ச விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் உற்சவம் நடைபெற்றது. கடந்த 20ம் தேதி அடியார்க்கு நால்வர் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் கடந்த 21ம் தேதி செண்பகதியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்த மண்டபத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது நேற்று தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.அதைத் தொடர்ந்து இன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா வெகுவிமர்ச்சியாக நடந்தது. இதில் 5தேர்களில் செண்பகத்தியாகராஜர்,நிலோத்தம்பாள், வினாயகர்,முருகன், சண்டியோஸ்வர் உள்ளிட்ட 5 தேர் திருவிழா சிறப்பாக நடந்தது.தேர் திருவிழாவை தொகுதி எம்.எல்.ஏ. ராஜசேகரன், கலெக்டர் இஷிதா ராட்டி. தருமபுரம் ஆதின கட்டளை விசாரணை சிவகுருநாதர் தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். 5தேர்கள் தெற்கு வீதியில் புறப்பட்டு வடக்கு, மேற்குவீதி வழியாக நிலைக்கு வந்தடைந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் தியாகராஜா தியாகராஜா கேஷங்கள் முழுங்க 5தேர்களை பக்தர்கள் பக்தி வரவசத்துடன் வடம் பிடித்து இழுந்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.மேலும் இன்பெக்டர் பிரவீன் குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நாளை சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது.நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருகின்றனர்.