உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மழை வேண்டி பத்திரகாளியம்மன் கோவிலில் நவ சண்டி வேள்வி ஹோமம்

மழை வேண்டி பத்திரகாளியம்மன் கோவிலில் நவ சண்டி வேள்வி ஹோமம்

அவிநாசி; அவிநாசி அடுத்த போத்தம்பாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டி நவ சண்டி ஹோமம் நடைபெற்றது.

அவிநாசி வட்டம், போத்தம்பாளையம் பக்கிரி காட்டுபகுதியில் எழுந்தருளியுள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் உலக நன்மைக்காகவும் மழை பெய்ய வேண்டியும் நவ சண்டி வேள்வி ஹோமம் நடைபெற்றது. சேவூர் அடுத்த குட்டகம் ரோட்டில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில் நேற்று நவ சண்டி வேள்வி ஹோமம் துவங்கியது. அதன் பின்னர் மஹா பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் மழை பெய்ய வேண்டி சிறப்பு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பத்திரகாளி அம்மன், சாமுண்டீஸ்வரி, பராசக்தி அம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கலசாபிஷேகம், திரவிய அபிஷேகம், மஹாதீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் ஹோம ரட்க்ஷை, பிரசாதம் வழங்கப்பட்டது. சண்டி வேள்வி ஹோமத்தையொட்டி காலை முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !