உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் 6ம் நாள்; தங்க ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு

ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் 6ம் நாள்; தங்க ஹம்ச வாகனத்தில் நம்பெருமாள் புறப்பாடு

திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை விருப்பன்திருநாள் எனப்படும் சித்திரைதேர் உற்சவம் 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் 6ம் நாளில் உற்சவர் நம்பெருமாள் தங்க ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்க அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் மே 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த சித்திரைதேரோட்டத்தில் மட்டுமே நம்பெருமாள் உபயநாச்சியர்களுடன் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !