அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் குருபூஜை
ADDED :601 days ago
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் திருநாவுக்கரசு ஸ்வாமிகள் குருபூஜை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்த பெருமானால் அன்போடு அப்பரே என்று அழைக்கப்பட்ட திருத்தாண்டக வேந்தர் திருநாவுக்கரசு ஸ்வாமிகளின் குருபூஜை விழாவில் அப்பர் சாமியின் பதிகங்கள் வரலாற்று முறையில் முற்றோதுதல் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்பர் சுவாமிகள் இறைவனோடு இரண்டறக் கலத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பண்ணிசை பேரறிஞர் திருமுறை கலாநிதி கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த ஓதுவ மூர்த்திகள் மற்றும் பக்க இசை கலைஞர்கள் கலந்து கொண்டு பண்ணிசையோடு முற்றும் ஓதுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.