உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திரம் : காளஹஸ்தி சிவன் கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரம் : காளஹஸ்தி சிவன் கோயிலில் மூலவருக்கு தாராபிஷேகம்

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்க காளஹஸ்தீஸ்வரரின் மூலவருக்கு தாரா பாத்திர அபிஷேகம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று முதல் அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) தொடங்கி 28.5.2024) வரை தொடரும். இதனால்  இம்மாதம் 28ம் தேதி வரை சுவாமிக்கு தண்ணீர் தாரா ஏற்பாடு செய்யப்பட்டது.

 காளஹஸ்தீஸ்வரர் கோவிலில், வாயு லிங்கேஸ்வரரின் மூலவருக்கு, சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளிக்கும் வகையில், தாரா பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.  வெள்ளிக்கிழமை காலை, இரண்டாம் கால அபிஷேகத்திற்குப் பிறகு, கோயில் தலைமை அர்ச்சகர்கள் தலைமையில், வாயு லிங்கத்தின் மீது நீர் ஓடை விழும் வகையில் தாரா பாத்திரம் அமைக்கப்பட்டது.  இன்று முதல் 28ம் தேதி வரை கத்திரி வெயில் தாக்கம் உள்ள நிலையில்  இந்த நேரத்தில் வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும்.  அதுவரை வாயுலிங்கத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டு  (மூலவிராட்டின்) மூலவர் மீது மெல்லிய நீரோடை விழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !