கோவை கம்பீர விநாயகர் கோவிலில் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :890 days ago
கோவை; சுந்தராபுரம் காமராஜர் நகர் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் - 1ல் இருக்கும் கம்பீர விநாயகர் கோவிலில் சித்திரை மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் விபூதி காப்பு அலங்காரத்தில் வள்ளி தேவசேனா சமேதரராய் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.