சொக்கம்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :724 days ago
மேலுார்; சொக்கம்பட்டி தொட்டிச்சி அம்மன் கோயில் 67 ம் ஆண்டு சித்திரை பொங்கல் திருவிழா இன்று நடந்தது. எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் மேலூர் மெயின் ரோட்டில் உள்ள பிள்ளையார் கோயிலில் இருந்து ஊர்வலமாக பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், 12 அடி நீளமுள்ள அலகு குத்தியும் பறவை காவடி எடுத்தும், ஆணிபாதரட்சை அணிந்து அலகு குத்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார். அங்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கிடா வெட்டி பொங்கல் வைத்தனர். இவ் விழாவில் மேலுார், சொக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.