உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீராஜ ராஜேஸ்வர சுவாமி கோயிலில் பிரதமர் மோடி; 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக வழிபாடு

ஸ்ரீராஜ ராஜேஸ்வர சுவாமி கோயிலில் பிரதமர் மோடி; 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக வழிபாடு

தெலுங்கானா; தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் செய்ய கரீம் நகர் வந்த பிரதமர் மோடி, அங்குள்ள ஸ்ரீராஜ ராஜேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்த தெலுங்கானாவின் கரீம் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இது குறித்து பிரதமர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்  கூறியதாவது; இன்று காலை வெமுலவாடாவில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர ஸ்வாமி தேவஸ்தானத்தில் பிரார்த்தனை செய்தேன். காசியிலிருந்து எம்.பி.யாக இருந்ததால், இந்தக் கோவிலுடனான தொடர்பு இன்னும் அதிகமாக இருந்தது. 140 கோடி இந்தியர்களின் நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புக்காக நான் பிரார்த்தனை செய்தேன் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !