மழை வேண்டி அரியலூர் பிரசன்ன விநாயகருக்கு ஷவர் அமைத்து சிறப்பு பூஜை
ADDED :885 days ago
அரியலூர்: அரியலூரில் உள்ள ஸ்ரீ பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகப் பெருமானுக்கு திருநீறு எடுக்கும் பூஜை நடைபெற்றது. மழை வேண்டி விநாயகப் பெருமானுக்கு இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
அரியலூர், சின்னகடை பகுதியில் அமைந்துள்ளது பிரசன்ன சக்தி விநாயகர். இங்கு மழை வேண்டி தண்ணீர் தொட்டி அமைத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கண்ணாடி தொட்டிக்குள் உள்ள விநாயகருக்கு பன்னீர், வெட்டிவேர் கலந்த செயற்கை நீருற்று அமைக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். இவ்வாறு செய்வதால் மழை பொழியும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும்.