/
கோயில்கள் செய்திகள் / மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் பாதயாத்திரை
மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் பால்குடம் எடுத்து பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :486 days ago
கமுதி; கமுதி அருகே அபிராமம் பாதயாத்திரை குழுவின் சார்பில் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் முருகன் கோயிலில் 36ம் ஆண்டு சித்திரை கார்த்திகை விழா நடந்தது. இதனை முன்னிட்டு அபிராமம் துர்க்கை அம்மன் கோயிலில் உற்சவர் முருகன் மின்னொளி அலங்காரத்தில் தேர் ஊர்வலம் நடந்தது. காப்புகட்டிய பக்தர்கள் பால்குடம், அலகுவேல், காவடி எடுத்து சுப்பிரமணிய சுவாமி, பஸ் ஸ்டாண்ட், கமுதி- மதுரை சாலை வழியாக மேலக்கொடுமலூர் குமரக் கடவுள் முருகன் கோயிலுக்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றனர். மூலவரான முருகனுக்கு எலுமிச்சம், பழச்சாறு, திரவிய பொடி, நெல்லிப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு, மாதுளை, பழம் வகைகள், இளநீர் உட்பட 33 வகையான அபிஷேகங்கள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி, அபிராமம் அதனை சுற்றியுள்ள கிராமமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.