பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.24 கோடி
ADDED :487 days ago
பழநி; பழநி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.2.25 கோடி கிடைத்தது.பழநி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காணிக்கையாக 848 கிராம் தங்கம், 13.575 கிலோ வெள்ளி கிடைத்தது. மேலும் ரூ.2 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 568 மற்றும் 409 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.