ஆதி கும்பேஸ்வரர் சுவாமி கோவிலில் 42ம் ஆண்டு சித்திரை உற்சவம்
ADDED :872 days ago
கோவை; ராம் நகர் வி. என். தோட்டம், முத்துமாரியம்மன் கோவில் மங்களாம்பிகா சமேத ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் சுவாமி கோவில் 42ம் ஆண்டு சித்திரை உற்சவம் கடந்த 30ம் தேதி அன்று துவங்கியது. இன்று சித்திரை கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் காளகஸ்தி ஞான பிரசன்னாம்பிகா அம்பாள் அலங்காரத்தில் மூலவர் முத்துமாரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.