பழநி கிரி வீதியில் பக்தர்களுக்கு கட்டணமில்லா இரண்டாவது பஸ்
ADDED :558 days ago
பழநி; பழநி கிரிவீதியில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கட்டணமில்லா இரண்டாவது பஸ் வசதி செய்யப்பட்டது.
பழநி கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதல்படி கிரிவீதியில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால் பழநி கோயில் நிர்வாகத்தின் சார்பில் பாத விநாயகர் கோயில் இருந்து கிரி விதி சுற்றி வரும் வகையில் பக்தர்கள் பயணிக்க கட்டணமில்லா பஸ் வசதி செய்ய நீதிமன்ற வழிகாட்டுதல் வழங்கியது. அதன்படி தற்போது 15 பேட்டரி கார்கள், ஒரு பேட்டரி பஸ், ஒரு டீசல் பஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் கோயில் உபயதாரர் மூலம் இன்று மேலும் ஒரு பஸ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.