சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்
ADDED :558 days ago
சிவகாசி; சிவகாசி பத்ரகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
சிவகாசி பத்ரகாளியம்மமன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழா ஏப். 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன், வாகனம், காமதேனு வாகனம், கைலாச பர்வத வாகனம் , வேதாள வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு கோயிலில் பொங்கல் திருவிழா நடந்தது. மறுநாள் கயர்குத்து திருவிழா நடந்துது. இன்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.