ஆதிசங்கரர் ஜெயந்தி விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :554 days ago
பழநி; பழநி கலையம்புத்தூர் பகுதியில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நடைபெற்றது. பழநி கலையம்புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி விழா அனுசரிக்கப்பட்டது. அதில் ருத்ர ஜபம், கணபதி ஹோமம், ஆவஹந்தி யோமம், வசோர்தாரா ஹோமம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கலையம்புத்தூரில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. ஆதி சங்கரர் திருவுருவ சிலை வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.