ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் 68வது ஆண்டு பூகுண்டம் திருவிழா
ADDED :554 days ago
குன்னூர்; பாலகொலா ஊராட்சியில், ஆதிபராசக்தி மாரியம்மன் கோவிலில் 68ம் ஆண்டு பூ குண்டம் திருவிழாவில் விரதமிருந்த 65 பேர் குண்டம் இறங்கினர்.
நீலகிரி மாவட்டம் பாலகொலா ஊராட்சியில், அரசு சின்கோனா தோட்டத்தில் அமைந்துள்ள ஆதிபராசக்தி மாரியம்மன் கோவிலில் 68 வது ஆண்டு திருவிழா கடந்த, 11ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவில் இன்று பூகுண்டம் திருவிழா நடந்தது. இதில் 48 நாட்கள் விரதம் இருந்த 65 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர். தொடர்ந்து உடுக்கை ஒலிக்கு ஏற்ப குண்டம் இறங்கியவர்கள் பக்தி நடனம் அனைவரையும் பரவசபப்படுத்தியது. தொடர்ந்து அன்னதானம் இன்னிசை கச்சேரி. ஆடல் பாடல்கள் இடம் பெற்றது.