சென்னை இஸ்கான் கோயிலில் புஷ்ப அபிஷேகம்
ADDED :554 days ago
சென்னை; சென்னை, இஸ்கான் கோயிலில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில் இன்று மே 12 ல் அன்று மங்களகரமான புஷ்ப அபிஷேக நிகழ்வு வை மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
விழாவில் சுவாமிக்கு நூற்றுக்கணக்கான கிலோ எடையுள்ள வண்ணமயமான மற்றும் மணம் கொண்ட மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டது, தூய்மையான அன்பினால் உந்தப்பட்ட பக்தர்கள், இந்த அழகிய மலர்களால் செய்யப்பட்ட ஆடைகளை இறைவனுக்கு அணிவித்து, பக்தியின் ஆழ்ந்த அனுபவத்தை உருவாக்கினர். அபிஷேகத்திற்கு பின் பலிபீடத்தின் வெளியில் பிரசாதமான இதழ்கள் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் அனைவர் மீதும் பொழிந்தனர். சுவையான பிரசாத விருந்துடன் விழா இனிதே நிறைவுற்றது