உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுதுபடையல்; வளைகாப்பு விழா

தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுதுபடையல்; வளைகாப்பு விழா

அலங்காநல்லூர்; கொண்டையம்பட்டி வயித்து மலை அடிவாரத்தில் ஓம் சிவசுப்ரமணியர் கோயில் உள்ளது. இங்குள்ள தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது படையல் மற்றும் வளைகாப்பு விழா மே 3 துவங்கியது. மே 10 சிவசுப்பிரமணியர், தில்லை சிவகாளி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருவிளக்கு பூஜை நடந்தன. மே 11 அம்மன் குழந்தை பருவம் துவங்கி 36 வகை ஆடை அலங்காரம், உணவு படைக்கப்பட்டது. பக்தர்கள் கிராம செல்வ விநாயகர் கோயிலில் இருந்து சடங்கு சீர்வரிசை எடுத்து வந்தனர். அம்மனுக்கு, குழந்தை இல்லாதவர்களுக்கு வளைகாப்பு விழா நடந்தது. நேற்று காலை அடசல் பூஜை, படையல் பிரித்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹரி பகவான், மற்றும் பக்தர்கள் குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !