உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி சங்கரமடத்தில் வேதம் படித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் நீதிபதி

காஞ்சி சங்கரமடத்தில் வேதம் படித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார் நீதிபதி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் சங்கரம டத்தில் வேதம் பயின்று, வேதரக்ஷனா சமிதி அறக்கட்டளை சார்பில் நடந்த, வாய்மொழி மற்றும் எழுத்து தேர்வுகளில் வெற்றி பெற்ற 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா காஞ்சிபுரம் சங்கரமடத்தில் நடந்தது. காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சங்கர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலை வகித்து, வேதம் பயின்ற மாணவர்களுக்கு ஆசி வழங்கினார். சென்னை உயர் நீதி மன்ற நீதிபதி சி.வி.கார்த்தி கேயன், மாணவர்களுக்கு சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கினார். இந்நிகழ்வில் காஞ்சி புரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வாசுதேவன், சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர், ஸ்ரீகாரியம் செல்லா விஸ்வநாத சாஸ்திரி, டிரஸ்ட் உறுப்பினர்கள், நிர்வாகிகள் மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !