உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா துவக்கம்

கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா துவக்கம்

சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கண்நோய் உட்பட சகல நோய் தீர்க்கும் அம்மனாக நாட்டரசன்கோட்டையில் வீற்றிருக்கும் கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜை, வாஸ்து சாந்தியுடன் வைகாசி விழா துவங்கியது. இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்த அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !