தர்ம சாஸ்தா பரிபாலன சபை கோயிலில் மண்டலாபிஷேகம்;
ADDED :553 days ago
திருப்பரங்குன்றம்; மதுரை ஹார்விபட்டி தர்ம சாஸ்தா பரிபாலன சபை கோயிலில் மண்டலாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகம் மறுதினம் முதல் நடந்த மண்டலபூஜை இன்று நிறைவு செய்யப்பட்டு, மூலவர்முன்பு 108 சங்குகளில் புனித நீர் நிரப்பி வைத்து பூஜை நடந்தது. பின்பு மூலவர்கள் மஹா கணபதி, தர்ம சாஸ்தா, பாலமுருகன், மஞ்சள் மாதா, கருப்பணசாமி, நவகிரகங்கள், சிவபெருமான், காலபைரவருக்கு சங்குகளில் இருந்த புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், சுப்புராமன், சக்திவேல், மணிகண்டன், ஜெமினி, தங்கப்பாண்டி, அன்பு செழியன் பூஜை ஏற்பாடுகள் செய்தனர்.