ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் ராமானுஜர் ஜெயந்தி விழா
ADDED :552 days ago
ஆனைமலை; ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ராமானுஜர் ஜெயந்தி விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனம் என, ஒன்பது வகை அபிேஷகம் நடந்தது. அதன்பின், அலங்கார பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.