உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவு; கொட்டும் மழையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவு; கொட்டும் மழையில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோவை; ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் கொட்டும் மழையில் தீச்சட்டி எடுத்தும், அழகு குத்தி கிரேனில்  ஊர்வலமாய் வந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவை, ஆலந்துறை காமாட்சி அம்மன் கோவில் 97வது ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகு குத்தி,  பூசட்டி எடுக்கும் நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது.  இதில் சுமார் 1,000 திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு  பூச்சட்டி எடுத்து  ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செய்தனர். அதேபோல் கிரேன் மூலம் தொங்கியபடி அழகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் வந்து காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக நடைபெறும் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் ஆலாந்துறை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஜமாப், கேரளா செண்டை மேளம், கேரளா தையம் ஆட்டம் என பக்தர்கள் திருவிழா கலைகட்டியது.  இறுதி நாளான இன்று  மஞ்சள் நீராட்டு விழா  இசை நிகழ்ச்சிகளுடன் காமாட்சி அம்மன் கோவில் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !