உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி உற்சவம் : ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் உலா

வைகாசி உற்சவம் : ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் உலா

ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் வந்தனர்.

வைகாசி வசந்த உற்சவ விழா எப்படி ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுடன் தங்க கேடயத்தில் எழுந்தருளி சேதுமாதவ தீர்த்த குளத்திற்கு புறப்பாடாகினர். அங்கு சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்ததும், தீர்த்த குளத்தை சுற்றி சுவாமி அம்மன் வலம் வந்தனர் அப்போது கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இந்த வைகாசி உற்சவ விழா மே 23 வரை நடக்கும் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.

ஏமாற்றம் : 20 ஆண்டுக்கு முன்பு இந்த வைகாசி உற்சவ விழா குறித்து கோயில் நிர்வாகம் பக்தர்களுக்கு விளம்பரபடுத்தும். அப்போது ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் தற்போதைய விழா குறித்து உள்ளூர் பக்தர்களுக்கு கூட தெரியவில்லை. இதனால் வைகாசி உற்சவம் துவக்க நாளில் பங்கேற்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !