உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்; 5 கி.மீ., தூரம் நீண்ட வரிசை.. கஜவாகனத்தில் சுவாமி உலா

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்; 5 கி.மீ., தூரம் நீண்ட வரிசை.. கஜவாகனத்தில் சுவாமி உலா

திருப்பதி; திருப்பதி கோயிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காத்திருப்பு அறைகள் முழுவதும் நிரம்பிய நிலையில் பக்தர்கள் 5 கி.மீ., தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

பத்மாவதி பரிணயோத்ஸவம்; திருமலையில் பத்மாவதி பரிணயோத்ஸவம் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. வைகாசி மாதம் சுக்ல பக்ஷ தசமி அன்று பத்மாவதி ஸ்ரீனிவாசருக்கு பரிணயோத்ஸவம் நாளாகும். 1992 ஆம் ஆண்டு முதல் பத்மாவதி பரிணயோத்ஸவம் திருமலையில் நடைபெறுகிறது. இவ்விழா நேற்று துவங்கியது. முதல் நாள் அதாவது வைகாசி மாதம் சுக்ல பக்ஷ நவமி அன்று மாலையில் வேங்கடஸ்வர ஸ்வாமி கஜவாகனத்திலும், ஸ்ரீதேவி, மற்றும் பூதேவி பல்லக்கிலும் ஊர்வலமாக நாராயணகிரி உத்யானவனம் எழுந்தருளி, பின்னர் பரிணயோத்ஸவம் மிகவும் சிறப்பாக நடைபெறும். சங்கீத கச்சேரிகள் ஆஸ்தானம் நடைப்பெற்ற பின்னர் ஸ்வாமி, உபயதேவிமார்களுடன் கோயிலுக்கு திரும்பினர். இந்நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தானம் அதிகாரி ஏ.வி.தர்ம ரெட்டி, ஸ்ரீவாரி கோயில் துணை அலுவலர் லோகநாதம், சுப்பிரமணிய ரெட்டி, குண பூஷண ரெட்டி, அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !