வைகாசி முதல் சனி; அன்னூர் கரி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :873 days ago
கோவை ; கோவை மாவட்டம் அன்னூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவர் மற்றும் தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.