உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமூர்த்தி மலை கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது

திருமூர்த்தி மலை கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது

உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதிகளில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, திருமூர்த்தி மலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே , மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று மாலை முதல் கனமழை பெய்ந்தது. இரவு மழை தீவிரமடைந்த நிலையில், மலைப்பகுதியில் இருந்து தோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திருமூர்த்தி அணையை நோக்கி வந்தது. திருமூர்த்தி மலை அடிவாரத்தில், அணை அருகே , தோணி ஆற்றின் கரையில்
உள்ள , அமணலிங்கேஸ்வரர் கோவிலை மழை வெள்ளம் சூழ்ந்தது. கோவில் வளாகத்தில் உள்ள மூலவர் சன்னதி, சுப்ரமணியர் சன்னதியில் மழை வெள்ளம் கரைபுரண்டு சென்றது. அதேபோன்று, மலை மீது உள்ள பஞ்சலிங்கம் அருவி, காட்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்த மலைவாழ் மக்கள், கோவில் பணியாளர்கள் பாதுகாப்பான பகுதியில் மண்டபத்தில் தங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !