/  
                        கோயில்கள்  செய்திகள்  /  வைகாசி விசாகம்; திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்; பால்குடம் எடுத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் 
                      
                      வைகாசி விசாகம்; திருப்பரங்குன்றத்தில் குவிந்த பக்தர்கள்; பால்குடம் எடுத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன்
                              ADDED :527 days ago 
                            
                          
                           திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் பால்குடம் எடுத்து பக்தர்கள் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செய்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழாவில் வசந்த உற்ஸவம் நேற்று நிறைவடைந்தது. கோயிலில் மே 13ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கிய திருவிழாவில் தினம் இரவு ஏழு மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி வசந்த உற்ஸவம் நடந்தது. நிறைவுநாளான நேற்று வசந்த உற்ஸவம் முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடந்தது. இன்று பால்குட திருவிழா நடைபெறுகிறது. விழாவில் அதிகாலை முதல் பக்தரககள் பால்குடம், காவடி எடுத்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்திவருகின்றனர்.