உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வைகாசி விசாகம்; சுவாமிக்கு பால் அபிஷேகம்

கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வைகாசி விசாகம்; சுவாமிக்கு பால் அபிஷேகம்

கூடலுார்; கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பெண்கள் அதிகாலையில் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தபின் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெண்கள் பஜனைப் பாடல்கள் பாடினர். தீபாராதனை, சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலில் வைகாசி விசாக சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !