பெரியகுளம் கோயில்களில் வைகாசி விசாக கோலாகலம்
ADDED :611 days ago
பெரியகுளம்; பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் அரோகரா அரோகரா கோஷத்துடன் வைகாசி விசாக விழா கோலகாலமாக நடந்தது.
பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலில் வைகாசி விசாக விழா கோலாகலமாக நடந்தது. காலை 6:00 மணி முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். அரோகரா, அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். சில்வார்பட்டி முனையடுவ நாயனார் கோயிலில் இருந்து சிவனடியார்கள் திருக்கூட்டத்தினர் பால்குடம் எடுத்து வந்து மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. உற்சவர் பாலசுப்பிரமணியர், வள்ளி, தெய்வானைக்கு பல்வேறு நறுமணப் பொருட்களான பால், பன்னீர், தயிர், தேன், சந்தனம் உட்பட பல்வேறு பொருட்களை சங்கு வழியாக ஊற்றப்பட்டது. பூஜைகளை தினேஷ் சிவம், கார்த்திக் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.