உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மழை நீர் சூழ்ந்தது

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மழை நீர் சூழ்ந்தது

அவிநாசி; அவிநாசியில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் லிங்கேஸ்வரர் கோவிலில் உள் பிரகாரத்தில் மழை வெள்ளம் சூழ்ந்தது பக்தர்கள் வெளியேற முடியாமல் தவிப்பு

அவிநாசி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியான சேவூர்,தண்டுக்காரன் பாளையம்,தண்ணீர் பந்தல் பாளையம், குட்டகம் ரோடு, வேலாயுதம் பாளையம், பழங்கரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்தது. இதன் காரணமாக அவிநாசி நகர் பகுதியில் மழை வெள்ளம் பெருக்கேடுத்து ஓடியது. இதில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டாம் மற்றும் உள் பிரகாரத்திலும் மழை நீர் புகுந்து சூழ்ந்தது. மழைநீர் வெளியேற முறையான வடிகால் இல்லாததால் அதிகளவு மழை நீர் தேங்கியது. இதனால் பக்தர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !