கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் விழா; பக்தர்கள் தரிசனம்
ADDED :600 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயில் விழா நடந்தது. மே 7 ம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 15 தினங்கள் நகரில் சுவாமி உலா வருதல், திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், சக்தி கரகம் எடுத்தல், பொங்கல் வைத்தல், அக்னிசட்டி எடுத்தல் பறவைக் காவடி எடுத்தல் உள்ளிட்டவை நடந்தன. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.