திருச்செந்துார் கடற்கரையில் குறையாத கூட்டம்; இன்று பவுர்ணமியை முன்னிட்டு அலைமோதும் பக்தர்கள்
திருச்செந்தூர், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயிலில், வைகாசி விசாக திருவிழா நேற்று நடந்தது. இதையோட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் தரிசனம் செய்தனர்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இந்த பக்தர்கள் அதிகாலையிலிருந்து கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித புனித நீராடி நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். பல்லாயிரக்கணக்கான முருகப் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து, நீண்ட வேல்களால் அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்தினர். வைகாசி விசாக திருவிழா அடுத்து பவுர்ணமியை முன்னிட்டு இரண்டாம் நாளாக லட்சக்கணக்கான குவிந்தனர். இரவு நேரம் முழுவதும் கடற்கரையில் தங்கியிருந்த பக்தர்கள், இன்று காலை முதல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்குள் செல்ல முடியாத அளவு கூட்டம் அலைமோதியதால் வளாகத்தில் முருகனை வேண்டி பாதயாத்திரை பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.