பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வசந்த உற்ஸவம்
ADDED :586 days ago
சிவகங்கை; நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் வசந்த உற்ஸவ விழாவை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் நேற்று முன்தினம் வசந்த உற்ஸவ விழா தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று, காலை அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தேரோட்டத்தை காண வந்த பக்தர்கள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசித்து சென்றனர். இன்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன் செய்து வருகிறார்.