சித்தானந்த சுவாமி கோவிலில் 28ம் தேதி குரு பூஜை விழா
ADDED :585 days ago
புதுச்சேரி; கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், 28 ம் தேதி குரு பூஜை விழா நடக்கிறது. கருவடிக்குப்பத்தில் பிரசித்தி பெற்ற குரு சித்தானந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், குரு சித்தானந்த சுவாமியின் 187 வது ஆண்டு குரு பூஜை விழா, வரும் 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மறுநாள் 28ம் தேதி, காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், ருத்ர ஜபம் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு மகா அபிேஷகம், பூரணாஹூதி நடக்கிறது. காலை 9:30 மணிக்கு, கலச புறப்பாடு, சுவாமிக்கு கலசாபிேஷகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தீபராதனை நடக்கிறது. அதைத் தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு தீபாரதனை, இரவு 10:00 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.