உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேஷ வாகனத்தில் உலா வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்

சேஷ வாகனத்தில் உலா வந்த காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம், கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று காலையில் தங்க சப்பரத்திலும், மாலை, சிம்ம வாகனத்திலும் வரதராஜ பெருமாள் எழுந்தருளி உலா வந்தார். நான்காம் நாள் உற்சவமான நேற்று காலை சேஷ வாகன உற்சவம்நடந்தது. இதில், அதிகாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியருடன், வரதராஜ பெருமாள், பரமபதநாதன் திருக்கோலத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருளி வீதியுலாவந்தார். மாலை சந்திர பிரபை உற்சவம்நடந்தது. ஏழாம் நாள் உற்சவமான நாளை மறுநாள் தேரோட்டமும், 28ம் தேதி காலை, அனந்தசரஸ் தெப்பகுளத்தில் தீர்த்தவாரியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !