மாமல்லை ஸ்தலசயன பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் உற்சவம்
ADDED :531 days ago
மாமல்லபுரம்; முதல் ஆழ்வார்களில் நம்மாழ்வார் குறிப்பிடத்தக்கவர். வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் அவதரித்தார். இந்நாளான நேற்று முன்தினம் மாலை, ஸ்தலசயன பெருமாள் கோவிலில், அவருக்கும், ஸ்தலசயன பெருமாள், தேவியருக்கும், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திருப்பாவை சாற்றுமறை சேவையாற்றி, பெருமாள், ஆழ்வாருக்கு பரிவட்ட மரியாதை அளித்தார். தேவியருடன் பெருமாள், நம்மாழ்வார், இரவு வீதியுலா சென்றனர். கோவில் திரும்பியதும், திருவாய்மொழி சேவையாற்றி, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.