உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் கவர்னர் ரவி வழிபாடு

மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயிலில் கவர்னர் ரவி வழிபாடு

சென்னை: வைகாசி அனுஷம் தினத்தில் திருவள்ளுவர் திருநாள் ஆண்டுதோறும் கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி இன்று திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை, மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று (24ம் தேதி) கோயிலில் திருவள்ளுவர் சிலைக்கு தீப ஆராதனை செய்யப்பட்டு, காலை 10 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ரவி வழிபாடு பங்கேற்று வழிபாடு செய்தார். முன்னதாக கோவில் கவர்னருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து திருவள்ளுவரை வழிபட்ட கவர்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !