உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டு கோதண்டராமர் கோவிலில் கருடசேவை விழா விமரிசை

செங்கல்பட்டு கோதண்டராமர் கோவிலில் கருடசேவை விழா விமரிசை

செங்கல்பட்டு; செங்கல்பட்டு வேதாசலம் நகரில், புகழ்பெற்ற கோதண்டராமர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், கடந்த 7 ஆண்டுகளாக, வரதராஜ பெருமாளுக்கு, வைகாசி விசாகம், கருட சேவை விழா நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு, வைகாசி விசாகம், கருட சேவையையொட்டி, வரதராஜ பெருமாளுக்கு, நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு, திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கருட வாகனத்தில், மலர் அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். இதில், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம்ஆறுமுகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிபிரமுகர்கள் பங்கேற்றனர். நீண்ட வரிசையில் வந்த பக்தர்கள், சுவாமியைதரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டன. அதன்பின், சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, ஒப்பந்ததாரர் கணேஷ்குமார் மற்றும் கோவில்தக்கார், திருக்கோவில் பணியாளர்கள்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !