மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம்
ADDED :536 days ago
மதுரை; மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரில் நாச்சியார்களுடன் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் இன்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வியூக சுந்தரராஜ பெருமாள் நாச்சியார்களுடன் எழுந்தருளினார். அவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் துவங்கியது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து பெருமாளை வழிபட்டனர்.