உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி சரயு நதி கரையில் மகா பெரியவர் ஜெயந்தி மஹோத்ஸவம்

அயோத்தி சரயு நதி கரையில் மகா பெரியவர் ஜெயந்தி மஹோத்ஸவம்

அயோத்தி; அயோத்தி, சரயு நதி கரையில் மகா பெரியவர் ஜெயந்தி மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது.

எளிமையாக வாழ்ந்து காட்டியும், நியாய, தர்மத்தை எடுத்துச் சொல்லியும் மக்களை தன்பால் ஈர்த்த துறவி காஞ்சி மகாபெரியவர். எதிர்பார்ப்பு இல்லாத பக்தி, மனத்துாய்மை, எளிமை, ஒழுக்கம், நேர்மை இவையே ஆன்மிக வாழ்வின் அடிப்படை என்பது இவரது கோட்பாடு. எளிய மனிதரான இவர் பெரும்பாலும் தென்னங்கீற்று வேய்ந்த குடிசையில் தங்கினார். நாடு முழுவதும் பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்தார். காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி மஹோத்ஸவம் இன்று (24ம் தேதி) நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி அயோத்தி சரயு நதி கரையில் நடைபெற்ற விழாவில் வேதபாராயணம், நாம ஸங்கீர்த்தனம் பாடி ஏராளமான பக்தர்கள் மகா பெரியவரின் படத்துடன் வலம் வந்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !