பளியங்குடியில் பளிச்சியம்மன் கோயில் விழா; பழங்குடியின மக்கள் வழிபாடு
ADDED :535 days ago
கூடலுார்; பளியங்குடியில் பழங்குடியின மக்கள் வழிபடும் பளிச்சியம்மன் கோயில் விழா நடந்தது.
லோயர்கேம்ப் அருகே பளியங்குடியில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குலதெய்வம் ஆகிய பளிச்சி அம்மன் கோயில் அங்கு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று நாட்கள் விழாவாக நடத்தப்படும். இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் துவங்கிய விழா பொங்கல், அன்னதானம், விளையாட்டுப் போட்டிகள் என களை கட்டியது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அபிஷேகம் ஆராதனை நடந்தது. பழங்குடியின மக்களின் பாரம்பரிய முறைப்படி நடந்த விழாவை பார்க்க பக்தர்கள் அதிகம் சென்றனர். அன்னதானத்திற்காக மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையினர் அரிசி வழங்கினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது.