உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரியலூர் கோவில் திருவிழா; சாட்டை அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர் கோவில் திருவிழா; சாட்டை அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்

அரியலூர்; ஆண்டிமடம், பெரிய தத்தூர் கிராமத்தில் திரௌபதி, செல்லியம்மன் கோயில் தீமிதி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழா பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கம் உள்ளது. அதன்படி இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியாக இன்று பக்தர்கள் தீ மிதி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து சாட்டையடி வாங்கி விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர். சாட்டையடி வாங்கினால் எந்த நோய் இருந்தாலும் குணமடையும் என்பது இங்குள்ள பக்தர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !