திருமுருகன்பூண்டியில் புத்தர் ஜெயந்தி விழா; ஆராத்தி வழிபாடு
ADDED :510 days ago
அவிநாசி; திருமுருகன்பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தர் சேவாலயத்தில் பகவான் புத்தரின் ஜெயந்தி விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. திருமுருகன் பூண்டியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் பகவான் புத்தரின் ஜெயந்தி விழா நடைபெற்றது.
அதில் புத்தரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, புத்தரின் நாமாவளி ஜபிக்கப்பட்டது. அதன் பின்னர் ஏழைகளுக்கு உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. கோவை பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண வித்யாலயத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் சுவாமி நாராயணானந்தரின் பகவான் புத்தரின் வாழ்வும் வாக்கும் சொற்பொழிவு ஒலிபரப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆராத்தியும் பஜனையும் நடைபெற்றது.