அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் திருஞானசம்பந்த ஸ்வாமிகள் குருபூஜை பெருவிழா
ADDED :471 days ago
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ கருணாம்பிகை கலையரங்கத்தில் திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் குருபூஜை பெருவிழா நடைபெற்றது. இதில் திருஞானசம்பந்த பெருமான் மதுரையம்பதியிலே திருமடத்திலிருந்தவாறு திருஆலவாய் பெருமானை நினைத்து பாடி அருளிய 261வது பதிகத்திலிருந்து திருஇலம் பையங்கோட்டூரில் பாடி அருளிய 320 வது பதிகம் வரை சேக்கிழார் பெருமான் பெரிய புராணத்தில் அருளிய வரலாற்று முறைப்படி முற்றோதுதல் நிகழ்ச்சி பண்ணிசை பேரறிஞர் கரூர் குமாரசாமிநாத தேசிகர் தலைமையில் தமிழகத்தின் தலைசிறந்த ஓதுவ மூர்த்திகள் மற்றும் பக்க இசைக் கலைஞர்கள் பண்ணிசை மரபோடு முற்றோதுதல் நிகழ்ச்சியை நடத்தினர்.