சிருங்கேரியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தரிசனம்
ADDED :467 days ago
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 24, 25 தேதிகளில் சிருங்கேரிக்கு விஜயம் செய்து ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகா ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் ஆகியோரின் ஆசியினை பெற்றார். இவருக்கு ஶ்ரீமடத்தின் தலைமை அதிகாரி முரளி சிறப்பு வரவேற்பு அளித்தார். வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சந்திரமௌலீஸ்வரர் பூஜை மற்றும் ஸ்ரீ சக்கர பூஜையில் கலந்து கொண்டார். பின்னர் ஸ்ரீ சாரதாம்பாள், மலஹானிகரே ஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்து புதுடெல்லி திரும்பினார். இவருடன் உச்ச நீதிமன்ற அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் வெங்கடராமன் உடன் இருந்தார்.