உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை

கல்யாண வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை

ஆந்திர மாநிலம், புத்துார் அடுத்த நாராயணவனம் கிராமத்தில் பத்மாவதி தாயார் உடனுறை கல்யாண வெங்கடேச பெருமாள் அருள்பாலித்து வருகிறார். திருப்பதி வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயாரை திருமணம் செய்த தலம் என்பது இதன் சிறப்பு. இந்த கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.இதில், ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், கற்பக விருட்சம் என தினசரி பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளுகிறார். நேற்று காலை மோகினி அவதாரத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். இரவு 8:00 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளினார். கோபுர வாசலில், கருட வாகனத்தில் பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 28ம் தேதி காலை கல்யாண வெங்கடேச பெருமாள், தேரில் எழுந்தருளுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !