நெல்லையப்பர் கோயிலில் ஆனித் திருவிழா விநாயகர் கொடியேற்றத்துடன் துவக்கம்
                              ADDED :521 days ago 
                            
                          
                          
திருநெல்வேலி; நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா முன்னோட்ட மாக விநாயகர் கொடியேற்றம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருநெல்வேலி எனப் பெயர் வரக்காரணமாக அமைந்த காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் ஆண்டு முழுதும் 12 மாதமும் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆனித் தேரோட் டத் திருவிழா மிகவும் சிறப்பானது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவுக்கான முன்னேற்பாடுகள் 45 நாட்களாக நடைபெறும்.